Wednesday, January 19, 2011
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்(Marathi:सचिन रमेश तेंडुलकर) (Sachin Ramesh Thendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.[1] இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment