Wednesday, January 19, 2011
பகவத் கீதை...
இந்து மக்களின் புனித நூலாகக் கருதப்படுவது பகவத் கீதையாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்னர் எதிரணியை பார்வையிட்ட அர்ஜூனன், அங்கே தன் உறவினர்கள் பலர் இருப்பதைக் கண்டு போரிட மறுக்கிறான்.
அப்போது அர்ஜூனனை சமாதானம் செய்த அவரது தேரோட்டியான கிருஷ்ணர் (பார்த்தசாரதி), நாம் தர்மத்திற்காக போரிட வந்துள்ளோம். அப்போது உறுவு முறைகள் அங்கே குறுக்கிடக் கூடாது. நீ உன் கடைமையைச் செய்தாக வேண்டும் என்று கூறுகிறார். அப்போது கிருஷ்ணர் எடுத்துச் சொல்லும் தத்துவங்களும், யோகங்களும் அடங்கிய நூல் தான் பகவத் கீதை.
அதில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.
எவன் ஒருவன் எதனாலும் மகிழ்வதில்லையோ, துயரப்படுவதில்லையோ, எதையும், யாரையும் வெறுப்பதில்லையோ, எதற்கும் ஆசைப்படுவதில்லையோ, நல்லது கெட்டது இரண்டையும் துறந்த மனம் கொண்டவனாய் என்னிடத்தில் பக்தி கொள்கிறானோ அவனே எனக்கு பிரியமானவன்.
மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், பகைவனையும் - நண்பனையும், புகழையும் - பழியையும், குளிரையும் - வெப்பத்தையும், இன்பத்தையும் - துன்பத்தையும் சமமாகக் கொள்பவனும் எனக்கு பிரியமானவனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment