Wednesday, January 19, 2011

சுகமான உடற்பயிற்சி...

சுகமான உடற்பயிற்சி...

மனிதனாகப் பிறந்தவன் தன்னை பிறரிடம் பிரகாசிக்கச் செய்வதற்காக என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றுகின்றான். அதற்காக எந்தவிதமாக கடினவிடயங்களையும் தாங்கிக் கொள்ளக்கூடியவனாகவும் இருக்கின்றான். ஆனால் தன்னருகில் இருக்கின்ற சில விடயங்களை மறந்துவிடுவதுமுண்டு. அப்படி சிறந்த வழிமுறைகளில் ஒன்றுதான் செக்ஸ்!

'செக்ஸ்' என்ற வார்த்தையைக் கேட்டாலே தப்பான கண்டோட்டத்தில் பார்ப்பவர்கள்தான் அதிகம். ஆனால் அதனுடைய உண்மையை உணர்ந்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். மேலைத்தேய நாடுகளில் பாலியல் கல்விமுறை அமுல்படுத்தப்பட்டிருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்... (நாங்க மட்டும்தான் இன்னமும் எதையுமே வெளிப்படையாக பேசமுடியாமல் இருக்கிறோம்...). உண்மையிலேயே இந்த தாம்பத்யம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசவேண்டும். கடமைக்கு வாழ்கின்றோம் என வாழ்வதால் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். ஏனைய விடயங்களைப் பகிர்ந்துகொள்வதைப்போல் இந்த 'செக்ஸ்' விடயங்களையும் பகிர்ந்துகொள்வது கட்டாயமாகின்றது.

இந்த தாம்பத்ய விடயங்கள் பற்றி பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது இன்று நேற்றல்ல ஆதிகாலம்தொட்டு பல ஆய்வுகள் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்தவகையில் இப்போது விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் சிலதை அண்மையில் இணையத்தில் கண்டேன், உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உடலுறவினால் எங்களுக்கு எப்படியான அழகியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.
* பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.
* உடலுறவின்போது வெளியேறுகின்ற வியர்வையினார் மேனி பளபளப்பாக இருக்குமாம்.
* அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் மேலதிக கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் ஊழைச்சதை நீங்கி அழகுபெறுவீர்கள்.
* நீங்கள் நீச்சலில் ஈடுபடுகின்றபோது கிடைக்கின்ற உடலழகினைவிட 20 வீதம் அதிகமான அழகு உடலுறவினால் கிடைக்குமாம்.
* உடலுறவினால் மனவுளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.
* அடிக்கடி முத்தமிடுவதால் (உதட்டில்) பற்களுக்கு இனாமல் கிடைக்கின்றதாம். இதனால் பற்கள் பளபளப்பாக இருக்குமாம்.
* உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் உடலுக்குக் கிடைக்கின்ற ஒட்சிசன் சீராகக் கிடைக்கின்றதாம். இதனால் உடற்பொலிவு ஏற்படுமாம்.

மேலேகூறிய விடயங்கள் உடலுறவினால் கிடைக்கின்ற அழகு சம்பந்தப்பட்ட விடயங்கள். இதேவேளை மருத்துவரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கின்றனவாம். அதனையும் பார்ப்போம்...
* உடலுறவினால் உங்களுடைய உடற்சமநிலை பேணப்படுகிறதாம். இதனால் ஹோமோன் சுரப்புகள் சீராக இடம்பெறுகிறது. இதனால்தான் "செக்ஸ்' என்பது சுகமான உடற்பயிற்ச்சி என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொண்டால் இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுமாம்.
* நாளையதினம் ஏதாவது முக்கியமாக விடயம்பற்றி பேசவேண்டுமாக இருந்தால், இன்றைய தினம் உடலுறவு வைத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் உங்களில் கருத்தில் ஒரு திடம் இருக்குமாம். அதாவது மன உறுதியடையும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
* தினமும் உடலுறவு வைத்துக்கொண்டால் ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 வீதமாக அதிகரிக்குமென பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
* வயதானவர்கள் உடலுறவு அல்லது முத்தப் பரிமாற்றங்களை வைத்துக்கொண்டால் தேவையற்ற வருத்தங்களை தவிர்த்துக் கொள்ளலாமாம். அதாவது மூட்டு வருத்தம், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறைவடையுமாம்.
* உடலுறவின்போது இதயம் 80 தொடக்கம் 150 தடவைகள் துடிக்கிறதாம்... (சாதாரண சுகதேகிக்கு 72 தடவைகள் துடிக்கும்...). இதனால் இதயத்தினைச் சூழவுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறதாம். ஆகையினால் மார்ப்படைப்பு வருவதற்கான வீதாசாரம் குறைக்கப்படுகிறது.
* உடலுறவின் ஒருபகுதி என்பது நீங்கள் 1கி.மீற்றர் தூரம் நடப்பதற்குச் சமனானது என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* உடலுறவினால் இரத்தோட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்களுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.
* உடலுறவின்போது அதிகமாக மூச்சுவாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறதாம். இதனால் மூச்சடைப்பு போன்ற வியாதிகள் தவிர்க்கப்படுகிறது.
* மிகமுக்கியமாக அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்கின்ற பெண்களுக்கு மார்புப் புற்றுநோய் தொற்றுவது அரிதாம். ஆண்களுக்கும் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற வியாதிகள் வருவதில்லையாம்.

பார்த்தீர்களா... நாங்கள் பேசுவதற்கே தயங்குகின்ற "செக்ஸ்'இல் இத்தனை சிறப்பம்சங்கள் இருக்கின்றனவே... இதனால்தான் மருத்துவர்கள் Bedroom is the best Gym என்கிறார்கள். தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாவிட்டாலும் அன்பாக பழகுங்கள். அடிக்கடி முத்தங்களை பரிமாறிக் கொள்ளுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன... (ம்ஹு... நாங்க பெருமூச்சு விடுறத தவிர வேற என்னதான் செய்றது...?).

No comments:

Post a Comment