"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என் வாழ்த்துவது நம் மரபு. இதற்கு பதினாறு மக்கட் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ்க என பொருள் கொள்வோரும் உண்டு. பதினாறு பிள்ளைகளைப் பெற்ற பின்பு எப்படி பெருவாழ்வு வாழ்வது. அரசன் கூட ஆண்டி ஆகிவிடுவான்.
புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.
No comments:
Post a Comment