Saturday, January 22, 2011

உசிதம் ?

என்னை இழந்து
என் நிலையை இழந்து
என் கனவை இழந்து
என்னுடைய
அனைவரையும் இழந்து
உன்னைப் பெற வேண்டுமெனில்
இத்துணையும் இழப்பதற்க்கு
பதில்
உன்னை இழத்தல்
உசிதம்

முதல் காதலி ?

நண்பர்கள் கேட்டனர்
யார் உன் முதல் காதலி? என்று
நானோ
அவளுக்கு நரைத்து விட்டது
முதுகு வளைந்து விட்டது
தோல்கள் சுருங்கி விட்டது என்றேன்
சிரித்தனர்
அவர்கள் அறியவில்லை போலும்
அனைவருக்கும்
முதல் காதலி
அவரவர் தாய்தான் என்று.

மகனின் சின்ன வயிறும் ஒரு பிடி அரிசியும் !

மகனின் சின்ன வயிறும் ஒரு பிடி அரிசியும் ! - வாழ்க்கை கவிதை

என் வீட்டு
பால்கனியில் நின்று
பார்த்தால்
தெரிகிறது அவனது குடிசை வீடு !

அவன் வீட்டிலிருந்து
ஒரே புகை மண்டலம் !

அவன் மனைவி
அடுப்பில் எரிக்கும் ஈர விறகுகள்-
அவன் வீட்டு வறுமையை
பரவிக்காட்டியது !

ஆனாலும் அவன்
சிரித்துக்கொண்டிருக்கிறான்

அடுப்பில் எறிவது
ஒரு கைப்பிடி அரிசி தானென்று
தெரியாமல் " அம்மா வயத்த பசிக்குது "
என்றவனது
சிறு வயது மகன்
பல்லவி பாடி
படுத்துறங்கியே போனான் !

கொல்லைப்பக்கம்
சிதறுண்டு கிடக்கும்
கொஞ்சம் தவிடு ...
அவன் பாசமாய் வளர்க்கும் மாடு குடிக்க !

அதையும்
பக்கத்து வீட்டு
கொளுத்த கோழி
கொத்தி கொத்தி கேந்திக்கொண்டிருக்கிறது!
பாவம் !

ஆனாலும்
அவன் சிரித்துக்கொண்டிருக்கிறான்...
அவனுக்குத்தான் தெரியுமே...
அனவனது பண்ணையாரின் மனைவி
எப்படியும்
தினமும்
தந்திடுவார்
ஒரு பிடி அரிசியாவது...
தன மகனின் சின்ன வயத்தையவது
கழுவிக்கொள்ள!

நிலையானது நட்புறவு ஒன்றே !

 

காதலன் காதலிக்குள்ள உறவு -
கல்யாணமகும்வரை
“ நல்ல காதலர்கள் ”

கணவன் மனைவிக்குள்ள உறவு -
பிள்ளை பிறக்கும் வரை .
“நல்லதம்பதிகள் ”

தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு -
வாழ்க்கை அமைத்து கொடுக்கும் வரை .
“ அன்பான பிள்ளை ”

அண்ணன் தம்பிகள் உறவு -
படித்து ஆளாகும் வரை
“ நல்ல சகோதரர்கள் ”

தோழன் தோழிகளுக்குள்ள
நிலை மாறாத நட்புறவு -
இருந்தாலும் இறந்தாலும்
“ உயர் தோழர்கள் ”
“ உற்ற நண்பர்கள் ”
“ உண்மையான சிநேகிதர்கள் ”
“தளர்ந்த நிலையிலும்
பால்ய தோழர்கள் ”


அதான் நீ இருக்கிறாயே...

 

உனக்காக இருப்பேன்
என்பது குடும்பம்.
உனக்காக மட்டுமே
இருப்பேன் என்பது
காதல்..
எனகென்ன அதன் நீ
இருக்கியே என்பது
உண்மையான நட்பு...


தாய்மை...

  

வளரும் போது
தெரியவில்லை.
வளர்க்கும் போது தான்
தெரிகிறது.

காதலில் தோல்வி

 

காதலில் தோல்வி
அடைந்தவனுக்கு
அது தான் கடைசி தோல்வி.
அதில் வெற்றி பெற்றவனுக்கு
அது தான் கடைசி வெற்றி...

மனப் புத்தகம்...


மூடிய புத்தகம்
திறந்து வாசிக்கும்வரை
திரைமறைவில் இருக்கும்
அதன் உள்ளடக்கங்கள்
மனப் புத்தகமும் அப்படிதான்
வாழும் கால தருணங்களில்
தன்னை சார்ந்துள்ள சமூகம்
அளிக்கும் நிகழ்வெனும்
எழுத்துக்களை கொண்டு
பதியப்படுகிறது மனப் புத்தகம்
அதில் மரணம்வரை நீளும்
எழுதாத வெற்றுப் பக்கங்களும்
மனிதர்களின் மனப் புத்தகத்தை
மேலோட்டமாக வாசிப்பவர்கள்
நண்பன் பகைவன் இப்படி . . . .
சில பெயர்கள் சூட்டி
உறவை நகர்த்துகிறார்கள்
சுயம் வாசிப்பின் முயற்ச்களில்
அர்த்தம் அறியா திணறுகிறான்
இறைவனால் மட்டுமே வாசிக்கப்படும்
ஆழம்கொண்ட மனப் புத்தகத்தை
வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
சில மனிதர்கள்

எது இன்பம்...?

பயத்தினை வெல்வதே இன்பம்; - மனத்தில்
மரணத்தை வெல்வதே இன்பம்; - கல்வியில்
முயன்றதை அறிவதே இன்பம்; - பொறுப்பில்
தாயகம் காப்பதே இன்பம்; - களத்தில்
உயர்வினை அடைவதே இன்பம்; - நடப்பில்
இன்னலைச் சகித்தலே இன்பம்; - நிறைவில்
உய்த்திடும் ஞானமே இன்பம்; - இறுதியில்
இரணமே இலா மரணமே இன்பம்;
உறுதியாய்
மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;

அதிசயம் பெண்...

நீ
அவசியம் அறிய வேண்டிய
அதிசயம் பெண்.
உயிர்கள் அடையும்
உன்னதம் அடைபவள்
தனக்குள் புது
உயிரை முடைபவள்;
பெண்
ஓடத்தில் அல்ல - அவள்
மூங்கிலில் விழுந்த ஓட்டை!
இரசித்துப் பாரேன்

ஒரு நட்பு...

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதுமை...?


முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,
மளிகைக் கடைக்
கடனோடும்,
காய்கறிக் கடைக்
கடனோடும்,
வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,
அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்
‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.

அழகு இதுதானா ?

 




உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
 

குழந்தை !

ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?


உன் கார்மேகக் கூந்தலின்
வாசம் பிடித்து வானில் நடக்க ஆசை..!
உன் வெண்டை
விரல்களைக் களைந்து
விளையாட ஆசை..!
உன் தண்டைக் கால்களில்
கொலுசாய் மாறி
கலகலவென ஒலிக்க ஆசை ..!
உன் கெண்டை விழிகளின்
இமையாய் மாறி
உன்னை கண்ணடிக்க ஆசை..!
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?
அன்புக்கு ஆசைகள் அடி பணியுமா..?
பெண்ணழகே பதில் சொல்..!

உன் கெண்டை விழிகளை..!

உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது..!

நான் நினைத்ததும்..!

ஒருவரின் எண்ணங்களால்
மற்றொருவரை
மகிழ்ச்சிப் படுத்த முடியும்
என்பதை
முதன் முதலில்
சாதித்துக் காட்டியது
காதல்..!
அக்காதல் தற்போது
நம்மிருவரின் எண்ணங்களையும்
ஆக்கிரமித்திருப்பது போல்
தோன்றுகிறது..!
ஏனெனில்…
நான் நினைத்ததும்
என் முன்னே வந்து நின்று
எனைத் திக்கு முக்காட வைக்கிறாயே..!