Saturday, January 22, 2011

மகனின் சின்ன வயிறும் ஒரு பிடி அரிசியும் !

மகனின் சின்ன வயிறும் ஒரு பிடி அரிசியும் ! - வாழ்க்கை கவிதை

என் வீட்டு
பால்கனியில் நின்று
பார்த்தால்
தெரிகிறது அவனது குடிசை வீடு !

அவன் வீட்டிலிருந்து
ஒரே புகை மண்டலம் !

அவன் மனைவி
அடுப்பில் எரிக்கும் ஈர விறகுகள்-
அவன் வீட்டு வறுமையை
பரவிக்காட்டியது !

ஆனாலும் அவன்
சிரித்துக்கொண்டிருக்கிறான்

அடுப்பில் எறிவது
ஒரு கைப்பிடி அரிசி தானென்று
தெரியாமல் " அம்மா வயத்த பசிக்குது "
என்றவனது
சிறு வயது மகன்
பல்லவி பாடி
படுத்துறங்கியே போனான் !

கொல்லைப்பக்கம்
சிதறுண்டு கிடக்கும்
கொஞ்சம் தவிடு ...
அவன் பாசமாய் வளர்க்கும் மாடு குடிக்க !

அதையும்
பக்கத்து வீட்டு
கொளுத்த கோழி
கொத்தி கொத்தி கேந்திக்கொண்டிருக்கிறது!
பாவம் !

ஆனாலும்
அவன் சிரித்துக்கொண்டிருக்கிறான்...
அவனுக்குத்தான் தெரியுமே...
அனவனது பண்ணையாரின் மனைவி
எப்படியும்
தினமும்
தந்திடுவார்
ஒரு பிடி அரிசியாவது...
தன மகனின் சின்ன வயத்தையவது
கழுவிக்கொள்ள!

No comments:

Post a Comment