Saturday, January 22, 2011

மனப் புத்தகம்...


மூடிய புத்தகம்
திறந்து வாசிக்கும்வரை
திரைமறைவில் இருக்கும்
அதன் உள்ளடக்கங்கள்
மனப் புத்தகமும் அப்படிதான்
வாழும் கால தருணங்களில்
தன்னை சார்ந்துள்ள சமூகம்
அளிக்கும் நிகழ்வெனும்
எழுத்துக்களை கொண்டு
பதியப்படுகிறது மனப் புத்தகம்
அதில் மரணம்வரை நீளும்
எழுதாத வெற்றுப் பக்கங்களும்
மனிதர்களின் மனப் புத்தகத்தை
மேலோட்டமாக வாசிப்பவர்கள்
நண்பன் பகைவன் இப்படி . . . .
சில பெயர்கள் சூட்டி
உறவை நகர்த்துகிறார்கள்
சுயம் வாசிப்பின் முயற்ச்களில்
அர்த்தம் அறியா திணறுகிறான்
இறைவனால் மட்டுமே வாசிக்கப்படும்
ஆழம்கொண்ட மனப் புத்தகத்தை
வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
சில மனிதர்கள்

No comments:

Post a Comment