Sunday, January 23, 2011

முத்துலட்சுமி ரெட்டி!!!

முத்துலட்சுமி ரெட்டி (1886 - சூலை 22, 1968) புதுக்கோட்டை, தமிழ்நாடு) இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். பெண்களின் உரிமைகளுக்காக இவர் உழைத்தார். தேவதாசி முறை ஒழிப்பு, கைம்பெண்கள் மறுமணம், பெண் கல்வி ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தர்மம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார். ஆதரவற்ற பெண்களுக்காக 'அவ்வை இல்லம்' உருவாக்கினார். சென்னையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை உருவாகவும் காரணமாக விளங்கினார்.

No comments:

Post a Comment