Tuesday, December 28, 2010
வெற்றி
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
ஒப்பிடுதல்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
Monday, December 27, 2010
முதல் வாழ்க்கை...
“அ” தமிழின் உயிராம்...
என் உயிரின் கருவாம் "அப்பா"...
கண்களோடு உறவாடும் உறக்கத்தை...
உறங்கவைத்து எனக்கு உயிரூட்டிய "அம்மா"...
அன்புதான் அவள் மொழி...
பசி அறிந்து உணவூட்டுவாள்...
பரிவோடு நற்பண்புகளை...
நெஞ்சோடு பதித்திடுவாள் "அம்மா"
அழகிய தோட்டம் எங்கள் கிராமம்...
மரங்களின் மகிழ்ச்சி போர்வையில்...
உறவுகளின் நெருகங்களோடு...
ஒதுங்கிய பகுதியில் ஓர் குடிசை...
காலையில சூரியனின்..
கனிவான பார்வை...
கதிரவனின் கதிரோடு ஆரம்பிக்கும்...
அம்மாவின் அன்றாடப்பணி...
வாசலில்
கோணிப்பாய் விரித்து...
கவிழ்த்த எண்ணை டப்பா..
கைகளில் வட்டமிட்டதை...
தலையில் தடவி
வழிச்சி சீவிடுவாள்...
குண்டானில் பழகஞ்சி
குழிவெச்சி குழம்பூற்றி
கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிடுவா...
தவறுகளை திருத்திடுவா...
நற்பண்புகளை கூட்டிடுவா...
உறவுகளை காட்டிடுவா...
என்றும் உள்ளத்திலே தாங்கிடுவா...
பொங்கலுக்கு துணி வாங்கிய..
துணி பையி ஒன்னு ரெண்டு இருக்கும்...
அதுல ஒன்னு அவ எடுத்து...
வட்டத்தட்டோட சிலேட்டையை சேர்த்து வச்சி...
பையி காதுரெண்டும் ஏ தோளோடு மாட்டி...
பள்ளிவரை அனுப்பிடுவா...
பாசமான எங்கம்மா...
ஆசையோடு நான் ஓடி...
அண்ண கடையில கமருகட்டும்...
கரையாத சில்க் முட்டாயும்...
அப்பா கொடுத்த ஐம்பது பைசால..
ஐஞ்சி முட்டாய் நான் வாங்கி...
ஆசையோடு கடிச்சி...
ஆளுக்கொன்னா தின்ன காலம்...
இன்னைக்கும் நெஞ்செல்லாம் இனிக்குதப்பா...
பொறுப்புகள் இல்லா பருவம் அது...
சுழன்று சுற்றிய பம்பரங்களும்....
சுண்டி விரலில் குண்டுகளும்...
புத்துணர்வும் புன்சிரிப்பும் பொங்கும் வாழ்க்கை அது...
அன்போடும் சிறு அதட்டலோடும்...
அறிவை புகட்டி அனைத்தையும்...
கற்றுக்கொடுக்கும் எங்கள் ஆசிரியர்கள்...
இன்றும் என்றும் எங்கள் அன்பானவர்கள்...
உள்ளம் நிறைய சந்தோசம்...
உடலில் எங்கும் உற்சாகம்...
சின்னஞ்சிறு சண்டைகள் மண்ணிலே...
அதிலும் நிறைய ஆனந்தங்கள் கண்ணிலே...
பள்ளி சுற்றிலும் மரங்கள்...
மரங்களோடு பேசியது பறவைகள்...
பறவைகளோடும் விளையாடிய நாங்கள்...
பாடித்திரிந்த எங்கள் இளமை காலங்கள்...
வண்டுகளின் ரீங்காரம்...
வண்ணமயமான பூக்களை தேடி....
உள்ளிருக்கும் ஒருதுளி தேனுக்காக...
ஓயாது பாடிய பாடல்கள் எத்தனையோ....
ஆற்றிலும், கருவேலங் காட்டிலும்...
வெயிலிலும் வேப்பம்பழச் சுவையுலும்...
ஓடி ஓடி தேடினோம்...
குழந்தைகால குதூகலங்களை...
சந்தோசம் மட்டும் நெஞ்சிலே...
சந்து பொந்தெல்லாம் விளையாட்டிலே....
சென்ற எங்கள் சாலைகள்...
இதயம் நீங்கா சின்னஞ்சிறு நினைவுச்சோலைகள்.......
சின்னச் சின்னச் சேட்டைகள்.....
கள்ளம் இல்லா வாழ்(வு)வ(அ)து....
ஆணும் பெண்ணும் அறியாமலே...
அனைத்தும் பகிர்ந்தோம் மகிழ்ந்தோம் வகுப்பிலே..
போட்டிகள் விளையாட்டில் மட்டுமில்லை...
எங்களின் வகுப்பு பாடங்களிளும்தான்...
எதிரியாய் நினைத்த நட்பு...
இறந்தது. இறுதியாய் பிரியும் போது...
வேண்டும் பள்ளி பருவம்...
மீண்டும் பிறக்க வரம் வேண்டாம்...
இறக்கும் வரை படிக்கும்...
வரம் வேண்டும். எம் பள்ளியில்...
கல்லூரி
கடவுளை நம்புவதில்லை நான்...
கண்ணீர் விட்டு அழுதேன்
கடந்த கல்லூரி வாழ்வை...
மீண்டும் பெறும் வரம் வேண்டி...
தாயின் மடிக்கு சுகமான படுக்கை...
எத்தனையோ
பஞ்சனை மெத்தைகள் மட்டுமல்ல.
காதலியின் நெஞ்சனை தாங்கினால் கூட
தாயின் மடிக்கு சுகமான படுக்கை
வேறொன்றும்
உலகில் இல்லை என்பதை மட்டும்தான்
உள்ளம் உணர்த்துகிறது....
தன்னம்பிக்கை
"மூள்ளின்".. திறமையை,
பார்!.... தன்னை ;காலால்'
மிதித்தவனையே!.. 'கையால்'
எடுக்க வைக்கிறது".....
So be Confident.......
சிறந்த நண்பன்
சிறந்த நண்பன்
என்று யாரும் இல்லை..
நண்பன் என்றாலே
அவன் சிறந்தவன் தான்..............!!!!!!!!!!!
மண வாழ்க்கை
மணமேடை ஏறி என் கை பிடித்து........
மண வாழ்க்கை தொடங்கி ...
மாதம் சில வாழ்ந்த பிறகு..
என் மனதில் இன்னொருத்தி இருக்கிறாள்..
இந்த திருமணம் செல்லாது என்றீரே..
செல்லாத திருமனத்திற்கு , திருமணப்பரிசா,,
நான் சுமந்து கொண்டிருக்கும் குழந்தை..???
Subscribe to:
Posts (Atom)